சரித்திரம் ஜெயிச்சவங்க எழுதுறதுனு எல்லாரும் சொல்லுவாங்க. இல்லை. வாழுறவங்க அவங்களுக்கு வேண்டிய மாதிரி மாத்தி எழுதிக்கொள்வது தான் சரித்திரம். இது இன்னைக்கோ நேத்தோ நடந்தது இல்ல. காலம் காலமாக, கரெக்ட-அ சொல்லனும்னா ஐரோப்பிய, இத்தாலிய கடல் பயணிகளும், போர்த்துகீசியர்களும் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக செல்வ செழிப்பான இந்தியா-வை அடைந்து, கடல் கொள்ளையர்களை சமாளித்து மிளகு, ஏலக்காய், வைரம், வைடூரியம், தங்கம் மற்றும் விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே சரித்திரத்தை மாற்றி எழுதுவது என்பது ஆரம்பமானது.
எடுத்துக்காட்டாக,
முதன் முதலில் அமெரிக்காவில் கால் வைத்தது அல்லது ஒரு தற்காலிக குடியிருப்பை அமைத்தது கிறிஸ்டோபர் கொலம்பஸ் அல்லது அமெரிக்கோ வெஸ்புகி என்றே நம்மில் பலரும் நினைப்பதுண்டு. இதைத்தான் சரித்திரமும் குறிப்புக்களின் வாயிலாக உறுதிப்படுத்தியது. ஆனால் வைகிங்குகள் c.1000 வருடத்திற்கு முன்னதாகவே அமெரிக்க கண்டத்தில் கால் வைத்திருந்தனர்.
யார் இந்த வைகிங்க்ஸ்?
இவர்கள் மீன்பிடி படகுகள் மற்றும் ட்ராகன் படகுகளை வடிவமைத்து கட்டுவதில் தலை சிறந்தவர்களாக விளங்கினர். ஸ்வீடன், நார்வே, டென்மார்க் இந்த நிலங்களின் பூர்வகுடிகளை வைகிங் என்று சொல்லுவார்கள். டென்மார்க் அதிக மணல் பரப்புகளையும், ஸ்வீடன் காடுகளையும், நார்வே மலைகளையும் உள்ளடக்கியது, மீன்பிடிப்பது, விவசாயம், கால்நடைகளை வளர்ப்பது இவர்களது பிரதான தொழில். காலப்போக்கில் விவசாயம் மெல்லமாக அழிந்து, கடல் கொள்ளையர்களாக மாறி கொள்ளையடிக்க துவங்கி, கொள்ளை அடித்தல் வைகிங்குகளின் முழுநேரத் தொழிலாக மாறியது. வைகிங்குகளின் இந்த மூன்று நிலத்தையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா (Scandinavia) என்று சொல்வதுண்டு. கொள்ளையடிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் சிறிய மீன்பிடி படகுகளில் சென்று கொள்ளையடித்து சொந்த நிலத்திற்கு திரும்பினர். பின்னர் அதிக ஆசையின் காரணமாக பெரிய ட்ராகன் படகுகளில் சென்று மாதக்கணக்கில் கடலில் இருந்து கொள்ளையடித்தனர் மற்றும் புதிய குடியேற்றங்களை அமைத்தனர். ஸ்காண்டிநேவியா-ல் குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவார்கள். நாடு கடத்தப்படுவது தான் உச்சபட்ச தண்டனையாக இருந்தது.
கிரீன்லாந்து உருவான கதை.
எரிக் தி ரெட் (Eric the Red) வைகிங்குகளில் முக்கியமானவர் இல்லை, ஆனால் படகு கட்டுவதில், கொள்ளையடிப்பதில் திறமையானவர், இவர் ஒரு மது விரும்பி. பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் எரிக் ஒருவரை கொலைசெய்துவிட்டார். பஞ்சாயத்து கூடி Eric-யை நாடு கடத்துவது என்று ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இந்த தீர்ப்பில் உடன்பாடுஇல்லாத எரிக் அதிகமாக மது அருந்திவிட்டு அவருடைய மீன்பிடி படகில் நங்கூரத்தை அவிழ்த்துவிட்டு படுத்துக்கொண்டார். காலையில் கண்விழித்து பார்த்தபொழுது படகு நடுக்கடலில் இருந்தது. சற்று யோசித்து திசைகாட்டியை (காம்பஸ்) எடுத்து பார்த்தார், படகு காற்றின் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது, படகை இன்னும் வேகமாக செலுத்தினார், தொலைதூரத்தில் ஒரு தீவு தெரிந்தது, தீவுதானா என்று தொலைநோக்கி (marine telescope) கொண்டு உறுதிப்படுத்திக்கொண்டார். புதிய நிலப்பரப்பை கண்ட மகிழ்ச்சியில் படகை தனது ஊருக்கு திருப்பினார்.

Eric discovering Greenland
வீட்டை அடைந்து இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தும்போது அவர் கண்ட நிலப்பரப்பை பற்றி எரிக் பேசிக்கொண்டிருந்தார். நண்பரகளும் உற்சாகம் அடைந்து அங்கு சென்று குடியேறுவது என்று முடிவெடுத்தனர். தேவையானவற்றை சேகரித்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகு, எரிக் குடும்பம் (மகள், மனைவி ) மற்றும் அவரது நண்பர்கள், கூடவே இன்னும் சில குடும்பங்கள் நார்வே விட்டு மேற்கு நோக்கி 15 படகுகளில் எரிக் கண்ட புதிய நிலப்பரப்பை நோக்கி புறப்பட்டனர். ஒரு நாள் பயணத்திற்கு பிறகு அந்த நிலப்பரப்பை அடைந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, அது கிரீன்லாந்து இல்லை, வெறும் பனிபாறைகளை உள்ளடக்கிய இப்போதைய ஐஸ்லாந்து. கண்ணுக்கு எட்டும் தூரம் விவசாயம் செய்யும் சாத்தியக்கூறுகள் இல்லை என்று நினைத்து, ஒரு சில நண்பர்களும், சில குடும்பங்களும் மீண்டும் நார்வே-க்கு சென்றனர். ஆனால் எரிக் மற்றும் இதர மக்கள் மனம் தளராமல் ஒருவருட கால வாழ்க்கையை ஐஸ்லாந்தில் வாழ்ந்தனர். எரிக்கு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு லீஃப் எரிக்சன்(Leif Erikson) என்று பெயர் சூட்டினார்.
குளிர்காலத்தை சமாளிக்க முடியாமல் அனைவரும் ஐஸ்லாந்தில் இருந்து மீண்டும் மேற்கு நோக்கி பயணித்தனர், இரண்டு நாள் பயணத்திற்கு பிறகு, பச்சைப்பசேல் என்ற நிலப்பரப்பை அடைந்தனர். எரிக் குழுவிற்கு அளவில்லா மகிழ்ச்சி விவசாயம் செய்ய ஏதுவான நிலத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று. மூட்டைமுடிச்சுகளை நிலத்தில் வைத்துவிட்டு நான்கு பக்கமும் 1 மைல் தூரத்திற்கு நோட்டம் விட்டனர், குடியிருப்புகள் ஏதும் இல்லை கற்களும் கோரைபுற்களும் மட்டுமே தென்பட்டன. பனிப்பாறைக்கு புல்வெளி மேல் என்று ஆறுதல் சொல்லிக்கொண்டு, தற்காலிக குடியிருப்பை அமைத்தனர். இந்த இடம் தான் இப்போதைய கிரீன்லாந்து. கிரீன்லாந்தை முதலில் கண்டுபிடித்தவர் என்றமுறையில் இவரது சிலை கிரீன்லாந்தில் நிறுவப்பட்டுஉள்ளது

Erik the Red statue in Greenland
அமெரிக்காவை முதலில் யார் கண்டது ?.
இத்தாலி நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492-ம் ஆண்டு அமெரிக்கா கண்டத்தில் கால்வைத்ததாக குறிப்பு சொல்லப்படுகிகிறது. ஆனால் பின்னாளில் அவர் தரையிறங்கியாது கரீபியன் தீவுகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
அமெரிகோ வெஸ்புகி 1501-ம் ஆண்டு தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது இப்போது உள்ள தென் அமெரிக்காவை கண்டறிந்து தரையிறங்கினர். அவர் கால்வைத்து இப்போதைய ரியோ டி ஜெனிரோ (Brazil).
லீஃப் எரிக்சன் தனது அப்பா கிரீன்லாந்து-யை கண்டுபிடித்து குடியேற்றத்தை அமைத்து போல, லீஃப் எரிக்சன் யாரும் கண்டிராத ஒரு நிலப்பரப்பை கண்டறிய விரும்பினார். அதன் தொடக்கமாக 999-ம் ஆண்டு (9-ம் நூற்றாண்டு) தனது குழுவினருடன் (குழுவில் அவரது அக்காவும் இருந்தார்) அவர் இரண்டு மாத கடல்பயணத்திற்கு பிறகு இப்போது வட அமெரிக்காவில் உள்ள Newfounderland(Canada)-யை அடைந்தார். அங்கு ஒரு வருடம் தங்கி தற்காலிக குடியிருப்பை அமைத்தார். செவ்விந்தியர்களை சமாளிக்க முடியாமல் ஒருவருடத்திற்கு பிறகு கிரீன்லாந்து திருப்பினார். இவரது அக்கா இங்கயே தங்கியிருந்தார் பின்னாளில் செவ்விந்தியர்களால் கொல்லப்பட்டார்.

UNESCO World Heritage Site Vinland/New founderland- Canada

Leif Erikson discovering vinland(new founderland)
இப்படி பணம், பலம் படைத்தவர்கள் சரித்திரத்தை எதாவது ஒரு காரணத்தை சொல்லி மாற்றி எழுதிக்கொள்வது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி தான் லீஃப் எரிக்சன் மறைக்கப்பட்டார். பின்னாளில் வரலாற்று ஆய்வுகள் லீஃப் எரிக்சன்-யை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. அதன் விளைவாக லீஃப் எரிக்சன்-கு 1887-ல் Boston-ல் ஒரு சிலை நிறுவப்பட்டது.

Leif erikson statue in Boston
ஆனா இந்தகாலத்துல இங்க மக்கள் இரண்டு வகை தான்,
முதல் வகை, மிகப்பெரும்பான்மையினர்:
இவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அன்றாட இன்பம் தவிர வேற முக்கியம் இல்ல. இவங்க பகற்கனவு மிகவும் எளிமையானது. இவர்களில் பெரும்பாலானவர்க்கு அந்த வாழ்க்கையும், நிம்மதியும் கிடையாது. காரணம் அவர்களுக்கு இரண்டு பயம். ஒன்று, எதிர்காலம். இரண்டு, பக்கத்துவீட்டுக்காரன். எதிர்காலத்தில் நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற நிரந்தர சோகத்திலிருந்துகொண்டு, நிகழ்கால இன்பத்தை இழந்து சேமித்துக்கொண்டே இருப்பார்கள். வேறு இன்பம் கிடையாது இவர்களுக்கு. சேமிப்பு வளர்வதைப் பார்த்து வரும் மெல்லிய மனநிம்மதிதான் இவர்களது இன்பம்.
இரண்டாவது வகை, சிறுபான்மையினர்:
இவர்கள் புத்திசாலிகள், இவர்கள்தான் நாட்டின் பொருளாதார ஆளுமை, “நானும் என் சந்ததிகளும் உங்களை ஆளப்பிறந்தவர்கள், நாங்கள் உங்களை ஆளக்கூடியவன் அதனால் எங்களுக்கு உங்களை அழிக்கவும் உரிமை உண்டு” என்று நினைப்பவர்கள். இவர்களுக்கும் இன்பம் உண்டு. அவை பதவி, அங்கீகாரம், சரித்திரம், வரலாறு, இன்னும் பல… இவர்கள் பணத்திற்காக ஓட வேண்டியது இல்லை. இவர்களைத் தேடி பணம் ஓடி வரும். அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இந்த வகையில் இணையப் பெரும்பான்மையினர் சிலர் சிறுபான்மையினரின் காட்டாற்றில் குதித்து விடுகின்றனர். வெள்ளத்தின் வேகம் தெரியாமல் சிலர் சுழலில் சிக்கிக்கொள்கின்றனர், இன்னும் சிலர் குறைந்த தூரம் நீந்திச் சென்று விட்டு மூச்சு விட முடியாமல் கரையும் ஒதுங்கலாம் அல்லது காணாமலும் போகலாம். வெகு சிலரே தாக்குப் பிடித்து நீந்திக் கடந்து செல்கின்றனர், அவர்களுக்குத் தெரிவதில்லை பெயர் மட்டுமே சரித்திரத்தில் இருக்குமென்றும், அதையும் வரும் எதிர்காலம் அழித்து எழுதுமென்றும்.
-இளையாள் கார்த்திகேயன்
✍️ சரித்திரம் திருத்தி எழுதப்படும்….✍️
