மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முடி வெட்ட முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முடி வெட்டும் கடையின் தரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த கட்டணமாக 29$ வசூலிக்கப்படும். கூடவே 5$ வெட்டுபவருக்கு கண்டிப்பாக டிப்ஸ் தரணும். சரி கதைக்கு உள்ள போகலாம்.
கடையின் கதவு திறந்தும், டிங்-டிங், டிங்-டிங் டோர் பெல் சத்தம் ஒலித்தது, முடிவெட்டுபவர் திரும்பிப்பார்த்து,
ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ?
ஐ ஹேவ் எ அப்பாயின்மென்ட் என்றார் உள்ளே நுழைந்தவர்.
யுவர் நேம், சேயோன்.
அப்பாயின்மென்ட் லிஸ்ட்-யை சரிபார்த்து, யு ஆர் இன் கியூ, ப்ளீஸ் ஹேவ் எ சீட்.
முடிவெட்டுபவர்-க்கு சுமார் 50-வயது இருக்கும், இவர்தான் கடையின் Owner + worker, கடையை ஒருவராகவே கவனித்து நடத்துகிறார்.
சேயோன் நல்ல உயரம், மாநிறம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் 25-வயது, லாங் ஹேர் வைத்திருந்தார் முகத்தில் மெலிதான தாடி,மீசை. sofa-ல் அமர்ந்து புத்தகத்தை திருப்பி கொண்டு இருந்தார். இவர்தான் கடைசி கஸ்டமர் என்று அனுமானித்துக் கொண்டார். மொபைல்-லில் லாங் ஹேர் ஸ்டைல் பேட்டர்ன் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தார். 30-நிமிடத்திற்கு பிறகு,
நெக்ஸ்ட் “சேயோன்”, என்றார் முடிவெட்டுபவர்.
சேயோன் சென்று முடி வெட்டும் சேர்-ல் அமர்ந்தார், கழுத்தைச் சுற்றி ஒரு டிஸ்சு பேப்பர்-யை ஒட்டி, பிறகு கழுத்து வரைக்கும் ஒரு துணியை போர்த்தி கிளிப் போடப்பட்டது.
சேயோனின் முடியை கவனித்தவாரே, என்ன பண்ணனும் உங்களுக்கு “ஹேர்கட்,சேவ்,ட்ரிம்”?.
ஹேர்கட் என்றார் சேயோன்.
உங்களுக்கு நீளமான முடி, நீங்க ஏன் லாங் ஹேர் வச்சிருக்கீங்க,
எங்க ஜீன்-ல அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் முடி இல்ல அதனால நான் லாங் ஹேர் வச்சிருக்கேன் இட்ஸ் ஹேப்பி பார் மீ.
முடிவெட்டுபவர், மே பீ உங்க அம்மா ஜீன்-அ இருக்கலாம் என்றார்,
சேயோன் முடி வெட்டுபவரை பார்த்து, எங்க அம்மாவோட அப்பாவுக்கும் முடி இல்ல என்றார்.
ஓ ஐ சி, யு ஆர் லக்கி, உங்களக்கு என்ன ஸ்டைல் வேணும்,
சைடுல கொஞ்சம் ஷார்ட் பட் லெங்த்… என்று சொல்லிக்கொண்டு இருக்க, முடிவெட்டுபவர் குறுக்கிட்டு,
சைட்-ல் ஷார்ட் பண்ணி, பிரண்ட்-ல லாங் ஹேர் வச்சுடுறான், நீங்க உங்க லாங் ஹேர் அப்படியே மெயின்டன் பண்ணலாம் என்றார்.
முடிவெட்டுபவர், சிசர் எடுத்து சேர்-ன் பின்புறமாக நின்று முடியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். சேயோன், முடியின் நீளம் குறையாதவாறு முடிவெட்டுவதை கண்ணாடி வழியாக உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். சேயோனுக்கு இவர் மீது ஏனோ நம்பிக்கை இல்லை. அடுத்த முறை இந்த சலூன்-கு வரக்கூடாது என்று முடிவுசெய்து மனதை திடப்படுத்தி, முடிவெட்டி முடிக்கும் வரை கண்களை திறக்கக்கூடாது என நினைத்து கண்களை மூடிக்கொண்டார்.
“டோன்ட் பீ அஃப்ரைட், வில் மேக் யு குட் ஸ்டைல். டிரஸ்ட் மீ” என்று பேசிக்கொண்டே கண்ணாடியை பார்த்த முடிவெட்டுபவர், சேர்-யை எதிர்ப்புறமாக திருப்பி சேயோனுக்கு கண்ணாடி தெரியாதவாறு நின்று முடி வெட்டினார். இப்பொழுது அவர் இஷ்டத்துக்கு முடியை வெட்டினார். கீழே விழும் முடியின் அளவு அதிகமாக இருந்தது. வெட்டி முடித்து சேர்-யை கண்ணாடியை நோக்கி திருப்பி, இட்ஸ் டன் என்றார்.
கண்ணாடியை பார்த்த சேயோனுக்கு அதிர்ச்சி, லாங் ஹேர் முழுவதுமாக குறைக்கப்பட்டு மீடியம் ஸ்பைக்( medium spiky) ஹேர் ஸ்டைல் செய்யப்பட்டது.
சில நிமிடங்கள் கழித்து சேயோன், யு ஷார்ட்டன் மை ஹேர், ஐ ஏம் நாட் பேயிங் ஃபார் திஸ், என்று சண்டை போட்டார்,
நான் சொல்றத கேளுங்க, இது உங்களுக்கு நல்ல இருக்கு, நான் இந்த ஹேர் கட் பீல்டுல 20 years-அ இருக்கேன். இட்ஸ் சூட்ஸ் ஃபார் யு. யு ஹேவ் டு பே 35$, என்றார். நோ என்றார் சேயோன்.
சேயோன் கோவப்பட்டு கடையை விட்டு வெளியேற கதவருகே சென்றார், கடைக்காரர் மேஜை -ன் மீது வைக்கப்பட்டிருந்த சிஸோர்(scissor)-யை சேயோனை நோக்கி வீசினார், அது சேயோனின் அடி வயிற்றில் குத்தியது. சேயோன் அதை பிடுங்கி கீழே போட்டுவிட்டு, கடைக்காரரை தாக்கினார், மேலும் கோபமடைந்த கடைக்காரர் மோப் ஸ்டிக்(mop stick)-யை கொண்டு தாக்கினார், நிலைகுலைந்த சேயோன் தரையில் விழுந்தார். மெதுவாக கண் திறந்து பார்த்தார் சேயோன், மூக்கு, வாயில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னணியில் “ஐ செட் இட் சூட்ஸ் ஃபார் யு”, “20 years” என்று கத்தும் சத்தம் உலவிக் கொண்டிருக்க, சேயோனின் முகத்தில் தண்ணீர் ஸ்பிரே செய்து துடைக்க, இட்ஸ் டன் சார் என்றார் முடி வெட்டியவர். சேயோன் கண்களை திறந்து கண்ணாடியை பார்த்தார். இட்ஸ் மீடியம் ஸ்பைக்(medium spiky) ஸ்டைல் சார் என்றார் முடி வெட்டியவர் சிறிது நிமிடங்கள் யோசித்து, இரண்டு கைகளை கொண்டு முடியை தடவி பார்த்து, இட் லூக்ஸ் குட். யூ டன் எ கிரேட் ஜாப். ஹவ் மச்?, 35$ என்றார் கடைக்காரர். 40$ கொடுத்து விட்டு புன்னகையுடன் கடையை விட்டு வெளியேறினார்.
-இளையாள் கார்த்திகேயன்
✍️ பகல் கனவு கலைந்தது…. ✍️
