தாஜ்மஹால் விற்பனைக்கு !.

நாட்டின் வளத்தை, பொதுச்சொத்துக்களை வருமானம் தரும் எல்லா சமாச்சாரங்கள் அனைத்தயும் ஆட்சியாளர்கள் விற்க நினைப்பது, விற்று தின்பது (குடும்ப வாரிசுகள் மட்டும்) புதிது அல்ல காலம் காலமாக நடப்பது தான். அப்படி ஒரு நிகழ்வு தான் தாஜ்மஹாலை விற்க முயற்சித்தது. ஒன்று அல்ல இரண்டு முறை. 1830-ல் ஒரு பிரிட்டிஷ் பெருந்தலை தாஜ்மஹாலை விற்றுவிட முடிவுஎடுத்தார் அவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் “வில்லியம் பெண்டிங்”. இன்றைக்கும் இந்திய அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விக்கு விடையாக இருப்பவர் தான் இந்த “வில்லியம் பெண்டிங்” இவர் அமல்படுத்திய சட்டம் (Bengal Sati Regulation of 1829) சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் உடன்கட்டை ஏற்றப்படும் பழக்கத்தை ஒழித்தவர்.

சதி(உடன்கட்டை) என்பது குற்றத்திற்குரிய செயல். சதியை நிறைவைவேற்றுவோருக்கும், அதற்கு உடந்தையாக இருப்போருக்கும், பெண்களை சிதை நெருப்பில் குதிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவோரும் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற சட்டம் ராஜா ராம் மோகன்ராய் துணையுடன் பெண்டிங் அமல்படுத்தினார். அதற்கு பின் இந்த சதி என்ற செயல் இந்தியாவில் முடிவுக்கு வந்தது.

ராஜஸ்தானில் பெண் சிசு கொலை, ஒடிசாவில் பழங்குடி மக்களிடையே இருந்த நரபாலி பழக்கம், கொல்கத்தா மருத்துவ கல்லூரியை கட்டியது, ஆங்கிலம் பயிற்று மொழி, இந்திய நீதிமன்றங்களில் இருந்த பாரசீக மொழிக்கு பதிலாக வட்டார மொழிகளை பயன்படுத்துதல், கிழக்கு இந்திய கம்பெனியின் நிதிநிலைமையை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்தார், குறைந்த சம்பளத்தில் இந்தியர்களை வேலைக்கும் அமர்த்தினார். ராணுவ வீரர்களின் ஊதியத்தை குறைத்தார் இப்படி பல சீர்திருத்தங்களுக்கு செம்மலாக விளங்கிய பெண்டிங், தான் வாங்கிய நற்பெயர்களை கெடுத்துக்கொள்ள சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம் தான் தாஜ்மஹால் விற்பனை என்ற அறிவிப்பு.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கவிஞர், எழத்தாளர் எட்வர்ட் லியர் தாஜ்மஹாலை குறித்து வியந்து சொன்ன வார்த்தை ” உலக மக்களை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று தாஜ்மஹாலை கண்டு ரசித்தவர்கள், காணாதவர்கள்”. 1800-ல் இந்தியாவில் இருந்த, இந்தியாவிற்கு வந்து சென்ற அணைத்து ஆங்கிலேய, ஐரோப்பிய பயணிகளின் பயண குறிப்பில் இருந்த ஒரு இடம் “தாஜ்மஹால்”. தாஜ்மஹாலுக்கு சென்றுவரும் எல்லா ஐரோப்பிய, இங்கிலாந்து மக்களும் தாஜ்மஹாலை பார்வையிட்டதற்கு சாட்சியாக ஒரு மார்பிள் கல்லை உருவி சென்று வீட்டில் வைத்தும், அலுவலகத்தில் பேப்பர் வெயிட் ஆகவும், கவிஞர்கள், எழுத்தாளர்கள் குறிப்பு எழுத்தியும் பெருமை பீற்றிக் கொண்டனர்.

1761-ல் ஜாட் இனத்தவர்கள் தாஜ்மஹாலில் பொருத்தப்பட்ட ஒரு பிரமாண்ட வெள்ளி கதவினை கழட்டி சென்றனர். ஜாட் இனத்தவர்கள் வட இந்தியாவில் அதிக ஆளுமை படைத்தவர்கள். குறிப்பாக முகலாய கட்டிடங்களின் செல்வங்களை கொள்ளையடிப்பதில் வல்லவர்களாக இருந்தனர். 1761-ல் மகாராஜா சுராஜ் மால் ஆக்ராவை கைப்பற்றியபோது நடந்த நிகழ்வு தான் இந்த பிரமாண்ட வெள்ளி கதவை லவட்டிக்கொண்டு சென்றது. இதன் அன்றய மதிப்பு 1.5-லட்சம் இந்திய ரூபாய்.

இதனால் முகலாயர்களின் கட்டிடத்திலிருந்து உருவபட்ட கற்களின் மதிப்பு பெருகியது. இதை கேள்விப்பட்ட ஜெனரல் பெண்டிங் தாஜ்மஹாலை கல் கல்லா உருவி விற்க ஆசைப்பட்டு, 1830-ல் ஒரு விரிவான அறிக்கை தயார்செய்து லண்டனுக்கு அனுப்பினார். அதில், தாஜ்மஹாலை விற்றல் நமது கம்பெனின் நிதிநிலைமை நினைத்துப் பார்க்க முடியாதவாறு வலுப்படும். மேலும் அப்போதுதான் ஆங்கிலேய- பர்மியப் போர் முடிந்துஇருந்த்து. பர்மா-ல் ஆட்சியை நிறுவ ஆகும் செலவுகளையும் சமாளிக்கமுடியும் என்று விரிவான அறிக்கையை சமர்ப்பித்து விற்க அனுமதியும் பெருவிட்டார். அந்த சாமத்தில் வில்லியம் பெண்டிங்-ன் மதிப்பு மிகவும் உயர்த்து.

இதை மட்டும் கொஞ்சம் என் வட்டார வழக்கில் எழுதிக்கொள்கிறேன்.
நெறய பேர் யோசிக்கலாம் தாஜ்மஹாலை எப்படி விற்க முடியும், லூசு மாதிரி எதோ கிறுக்கி வச்சுஇருக்கான்-னு. பெண்டிங் சாதாரண ஆள் இல்ல. தாஜ்மஹாலை விற்பதற்கு முன்னாடி ஒரு முன்னோட்டம் பார்த்து இருக்கார். அது தான் திவான் -இ-காஸ் (Diwan-e-Khas).

ஆக்ரா கோட்டையில் முகலாய அரசர் விருந்தினர்களை சந்திப்பதற்க்காக கட்டப்பட்டது தான் இந்த திவான் -இ-காஸ். ஏகப்பட்ட கலை வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம். அனால் அதன் ஒரு பகுதியில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளில் குறை இருப்பது போல அல்லது ஒரு பகுதி காணாமல் போனது போல் ஒரு உணர்வு இருக்கும். அது உண்மைதான், அங்கு அமைக்கப்பட்டியிருந்த குளியலறைக்கான(shahi hammam) அமைப்புதான். கிழக்கு இந்திய கம்பெனி அதை முழுவதுமாக மார்பிள் மார்பிள்ளாக பெரியத்தெடுத்து விற்றது பெண்டிங் தலைமையில்தான். இப்போது புரிகிறதா?. 2017-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் கவிதா சிங் தாஜ்மஹால் விற்பனை பற்றியும், அதற்க்கான முன்னோட்டமாக கருதப்பட்ட திவான் -இ-காஸ் பற்றியும் விரிவான ஆதாரங்களுடன் ஒரு ஆய்வை சமர்பித்துள்ளார்.

இந்தியாவுல எந்த வரலாற்று பேராசிரியர் ஃபீல்டு ஒர்க் பன்னி ரிசெர்ச் பன்றாங்கனு தெரியல. பட் பாவம் அந்த ரிசெர்ச் ஸ்கலர் அண்ட் ரிசெர்ச் அஸோஸியேட் நோ கிரெடிட் ஃபார் தெம். சரி பெண்டிங் விசியத்துக்கு வருவோம்.

இதையெல்லாம் சிந்தித்த லார்டு பெண்டிங் பிரபு (தர்மப்பிரபு) ஒவ்வொரு மார்பிளையும் உருவ மேகொண்ட முயற்சிக்கு பலனாக 1831-ஆம் ஆண்டு தாஜ்மஹால் ஏலம் விடும் முதல் முயற்சி ஆரம்பமானது, பலரும் ஆர்வமாக ஏலம் கேட்டனர். சேத் லட்சுமிசந்த் ஜெயின் என்பவர் தான் அதிகபட்சமாக 2-லட்சம் ரூபாய் தொகைக்கு ஏலம் கேட்டார். தாஜ்மஹாலை பொறுத்தவரை இது மிக குறைவான தொகை. ஏலத்தில் நிறைவு இல்லாத லார்டு பெண்டிங் முதல் ஏலத்தை ரத்து செய்தார். அனால் அவர் விற்கும் முயற்சியை கைவிடவில்லை.

யார் இந்த சேத் லட்சுமிசந்த் ஜெயின்?
இவர் ஜெய்ப்பூரின் மால்புராவை சேர்ந்த பெரும் செல்வந்தர், மேற்கோள் காட்டி சொல்லவேண்டும் என்றால் மஹாராஜாக்களுக்கு கடன்தருபவர், துரைமார்களுக்கெல்லாம் நெருக்கமானவர், லண்டன் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதும் அளவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள செல்வந்தர். இவர் ஒரு இந்து கோவிலை யமுனை நதி கரையில் நிறுவுவதற்க்காக தாஜ்மஹாலை வாங்க நினைத்தார்.

1830-ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரராகவும், கொள்ளையர்களை அடக்குவதில் வல்லவராகவும் திகழ்ந்த வில்லியம் ஹென்றி ஸ்லீமேன்(William Henry Sleeman) தனது சரிதையில் (rambles and recollections of an indian official) தாஜ்மஹால் ஏலம் குறித்து மிக தெளிவாக குறிப்பிட்டுஇருந்தார். ஆக்ரா கோட்டை மார்பிள் கற்களுக்கும், தாஜ்மஹாலுக்கும் எதிர்பார்த்த விலை கிடைத்திருந்தால் கல் கல்லாக உருவி விற்றிருக்க வாய்ப்பு மிக அதிகம்.

பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் 1832-ல் பெண்டிங் தர்மப்பிரபு இரண்டாவது ஏலத்தை தொடங்கினார் இந்தமுறை ஏழு லட்சத்துக்கு (7 Lakhs) கேட்கப்பட்டது. இம்முறையும் சேத் லட்சுமிசந்தே வெற்றியாளர். எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார். தாஜ்மஹாலை கவனமாக உடைத்து மார்பிள் கற்களை பிரித்தெடுக்க கணிக்கிட்ட மதிப்பைவிட ஏழு லட்சம் என்பது குறைவு. செய்வது அறியாது பெண்டிங் திகைத்துப்போனார். அதற்குள் விஷயம் வெளியே பரவி ஆக்ரா கலவரத்திற்கு தயாரானது. தாஜ்மஹாலை உருவாக்க பாடுபட்ட இந்து, முஸ்லிம்கள் தாஜ் கஞ்ச் (Taj Ganji) பகுதியில் தங்கியிருந்தனர் விஷயம் அவர்களுக்கு தெரியவர அவர்களின் எழுச்சி பென்டிங்யை மண்டியிட செய்தது. கூடவே பிரிட்டிஷ் பாராளும்மன்றத்திலிருந்து தாஜ்மஹால் ஏலத்தை கைவிடுங்கள் என்று கோபத்துடன் செய்தி பெண்டிங்கு அனுப்பப்பட்டது.

சேத் லட்சுமிசந்த் தான் ஏலம் எடுத்த உரிமையை கோரி நீதிமன்றத்துக்கு சென்றார். நீதிபதி இந்த நினைவு சின்னத்தை வாங்கி என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார், அதற்கு உடைத்து marble-யை விற்கப்போகிறான் என்றார். நீதிபதி அந்த ஏலத்தை ரத்து செய்தார் தாஜ்மஹால் காப்பாற்றப்பட்டது.

-இளையாள் கார்த்திகேயன்

✍️ இது கதை அல்ல நிஜம் ✍️ ..

Leave a comment