சில நேரங்களில்…

ப்ரொஜெக்டர் ஸ்கிரீன்-ல “Objects of Anthropology” என்று அச்சிடப்பட்டு சில படங்களுடன் ஆர்க்கியாலஜி ப்ரொபசர் Kaufman லேசர் பாயிண்டர் Pen கொண்டு அவைகளை விளக்கிக் கொண்டிருந்தார். ஸ்டூடண்ட்ஸ், ஆல் கிளியர்? என்ற கேள்வியுடன் மாணவர்களை பார்த்தார். கடைசி டெஸ்க்-ல் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருந்தான். ஹூ இஸ் தட், ஸ்லீப்பிங்? என்று சத்தமாக ப்ரொபசர் கேட்டார். தமயந்தி அவனை உலுக்கி எழுப்பினாள் தூக்க கலக்கத்தில் எழுந்து நின்றான். இவன் பெயர் சேயோன் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டில் ஆர்க்கியாலஜி பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறான். இந்திய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்து வருபவன்.

இஃப் யூ ஆர் நாட் கீன் ஆன் திஸ் டாபிக் ப்ளீஸ் அவுட் என்றார் ப்ரொபசர்.

எதுவும் மறுப்பு தெரிவிக்காமல் அப்பாலஜி செய்து கிளாஸ் ரூம்-யை விட்டு வெளியே வந்தான். வானம் மெல்லிய பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண்பனியை பொழிய தொடங்கிக்கொண்டு இருந்தது. வின்டர் ஜாக்கெட்-யை மாட்டிக்கொண்டு வானத்தை பார்த்தான் உறைந்த பனித்துளி அவன் முகத்தில் விழுந்தது. கிளாஸ்-யை விட்டு வெளியேறியதை பொருட்படுத்தாமல் பனிப்பொழிவை பார்த்து மகிழ்ந்தான். பக்கத்தில் உள்ள starbucks-ல் இரண்டு chai latte வாங்கிக்கொண்டு பனிப்பொழிவை பார்த்தவாறு வெளியில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்து, ஒன்றை பென்சில் வைத்து விட்டு இன்னொன்றை எடுத்துக் குடித்தான். சிறுது நேரம் கழித்து தமயந்தி வந்து இவன் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் வருகைக்காக காத்திருந்த இன்னொரு chai latte என்னை எடுத்து குடி என்று சமிக்கை செய்தது. தேங்க்ஸ் சேயோன் என்று சொல்லி குளிருக்கு இதமாக கையில் வைத்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தாள்.

தமயந்தி, இவள் இலங்கை தமிழ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள். இவர்கள் இருவருக்கும் தமிழ் பேசவும் எழுதவும் தெரியும். நண்பர்களாக இவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது.

இன்னும் 2 weeks-ல காலேஜ் முடிக்கப்போறோம் ஃபைனல் எக்ஸாம் நல்ல பண்ணு என்றாள் தமயந்தி. ஒகே என்றான்.

ஹே சேயோன், நான் உங்க அம்மாவ பார்த்து இருக்கேன். பட் உங்க அப்பாவ பத்தி நீ எதுவும் சொன்னது இல்ல இப்போவாது சொல்லலாமில்ல.

அப்பாவ பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. 3 வயசு வரைக்கும் அப்பா கூடத்தான் இருந்தான், அப்பாவுக்கு அம்மாவுக்கும் ஒரு சண்டை வந்து. அம்மா, என்ன கூட்டிகிட்டு அமெரிக்கா வந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் நான் அப்பாவை நான் பாக்கல. அம்மாவும் என்ன இந்தியாவுக்கு கூட்டிகிட்டு போகல. அம்மாவோட சொந்தகாரங்க அப்போ அப்போ அமெரிக்கா வந்துட்டு போவாங்க.

உங்க அப்பா போட்டோ இருக்க, நான் பார்க்கலாமா?

என் வேலட்-ல ஒரு போட்டோ இருக்கு பட் அதுல அப்பா பேஸ் தெரியாது. அம்மா, அப்பா பேஸ்-ல கிறுக்கி வச்சுட்டாங்க. இதுதான் என்று சேயோன் வேலட்-யை காண்பித்தான்.

என்ன சண்டை? போத் ஆர் டிவோஸ்டு?.

இல்ல டிவோஸ் பண்ணல மியூச்சுவலா பிரிஞ்சிட்டாங்க. என்ன சண்டை-னு தெரியல. கேட்டா கோவப்பட்டு கத்துவங்க இல்லனா என்ன திட்டுவாங்க. அதனால நான் கேட்டுக்க மாட்டேன்.

ஒகே, தமயந்தி நான் கிளம்பறேன். அதர்வய்ஸ், ஐ அம் கோண மிஸ் மை பஸ்.
வாடா நான் வீட்டுல ட்ரோப் பன்றேன். இட்ஸ் ஒகே, ஐ பார்க் மை பைக் நியர் பஸ் ஸ்டாப்.
gotchu சேயோன். சி யு டுமாரோ இன் தி எக்சாம் பை. பை தமயந்தி. சேயோன் plainsboro fox dr பஸ் ஸ்டாப்-ல் இறங்கி அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை அடைந்தான்.

மறுநாள் காலை சேயோன் ஸ்டடி டேபிளில் தூங்கி கொண்டு இருந்தான். கண்விழித்து பார்த்தபோது டேபிள் கிளாக்-ல் அலாரம் 7.30 மணியிலிருந்து அடித்துக்கொண்டு, தற்போதைய நேரம் 8.10 என்று காட்டிக்கொண்டு, ஸ்டிக்கி நோட்ஸ்-ல் “exam tomorrow” என்று எழுதி ஒட்டப்பட்டு இருந்தது. திடுக்கிட்டு எழுந்தவன் அவசரமாக பல்துலக்கி, கிடைத்த winter cloths-யை மாட்டிக்கொண்டு அவன் ரூம்-ல் இருந்த வெளியே வந்து மெயின் door-யை திறந்து பார்த்தான் எங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது. பனிபடர்ந்த வீடுகள், பூங்கா இவற்றை கவனிக்காமல் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பனிபடர்ந்த சாலையில் விரைந்தான். பஸ் ஸ்டாப்-யை நோக்கி செல்லும்முன் அவன் கண்முன்னே பஸ் அவனை கடந்து சென்றது. செய்வது அறியாது சைக்கிளை பூட்டி பார்க் செய்து Bus time schedule board-யை ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகில் உள்ள பெஞ்சில் வலதுபுறம் அமர்ந்து டைம் பார்க்க அவனுடைய மொபைல்-யை எடுத்தான் மணி 8.30. பஸ் ஸ்டாப்-ல் யாரும் இல்லை. கண்ணுக்கெட்டும் தூரம் பஸ்-ஓ, மக்களோ தென்படவில்லை. அடுத்த பஸ்-காக பனிபடர்ந்த சாலையை பார்த்து கொண்டு இருந்தான்.

சம்திங் ராங்? என்று இடது புறம் இருந்து நிதானமான ஒரு குரல் அவனுக்கு கேட்டது. பதட்டத்துடன் திரும்பி பார்த்தான்.

55 வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் சிரித்தமுகத்துடன் வெள்ளை நிற விண்டர் ஜாக்கெட் மற்றும் கழுத்தை சுற்றி ஸ்கர்ப் அணிந்து கால் மேல் கால் போட்டு கொண்டு பெஞ்சில் இடது புறம் அமர்ந்திருந்தார். அவர் தோற்றம் அவருக்கு தமிழ் தெரியும் என்று காட்டிக்கொடுத்தது.

Sorry, நான் உங்கள பயப்படுத்தறதுக்காக உங்களை அப்படி கூப்பிடல. என்றார் அந்த மனிதர்.
நோ இட்ஸ் ஃபைன். நீங்க வந்து உட்கார்ந்து நான் பாக்கல. சிறிது நேரம் யோசித்த அந்த மனிதர்
so, நீங்க ஏன் ரொம்ப பதட்டமா இருக்கீங்க? என்றார்.
நான் யுனிவர்சிட்டிக்கு போற பஸ்-அ மிஸ் பண்ணிட்டேன்.
இஸ் எனிதிங் இம்பார்டன்ட் டுடே? எஸ் டுடே இஸ் மை எக்ஸாம் அட் 8.30.
தன்னுடைய வாட்ச்-ல் மணியை பார்த்த அந்த மனிதர். நீங்க எக்ஸாம்-அ மிஸ் பண்ணிட்டீங்க. இட்ஸ் ஒகே, அவங்க உங்கள எக்ஸாம் எழுத விடுவாங்க-னு நான் எதிர்பார்க்கிறேன்.
சேயோன் எந்த பதிலும் சொல்லவில்லை அமைதியாக இருந்தான்.
சிறுது அமைதிக்கு பிறகு சேயோன் கையை பார்த்த அந்த மனிதர், நீங்க நல்ல ஒரு அழகான வாட்ச் கட்டி இருக்கீங்க என்றார்.
தேங்க்ஸ் என்றான் சேயோன். ஆனா இது வேலை செய்யாது.
வொர்க் ஆகாத வாட்ச்-அ கட்டிருக்கிறது கொஞ்சம் அசிங்கமா இருக்கு. இந்த வாட்ச்-அ எப்போ வாங்கினீங்க?
when i was born, எங்க அப்பா குடுத்தது-னு எங்க அம்மா சொன்னாங்க. he wore it all his life என்றான்.
கேக்க நல்ல இருக்கு. உங்க அப்பா ஒரு நல்ல மனிதரா?
I am told he was என்றான் சேயோன்.
நீங்க இந்த வாட்ச் வச்சிருக்கறத உங்க அப்பா பார்த்த, I am sure he would be glad என்றார் அந்த மனிதர்.

சேயோன் கவலை தேய்ந்த முகத்துடன் கையில் கட்டி இருந்த வாட்ச்-யை பாசத்துடன் தடவி பார்த்து கொண்டான். இந்த காட்சியை பார்த்த அந்தமனிதரின் முகம் வாடியது. இருவரும் பனிபடர்ந்த சாலையை ரசித்தனர்.

இந்த பஸ்-ல நீங்க அடிக்கடி travel பண்றீங்களா? என்று சேயோன் கேட்டான்.
இல்ல, இது தான் First time.
Strange. நான் உங்கள இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. சேயோன் தயங்கி நீங்க எங்க போறீங்க? என்று கேட்டான்.
நான் ரொம்ப காலமா பார்க்காத ஒருத்தர பார்க்க போறேன்.
Oh, that’s nice. An old friend?
sort of. அவங்க என்ன ஞாபகம் வச்சிருப்பாங்க நான் எதிர்பார்க்கல.
its been that long?
ஆம் என்று தலை அசைத்து, நான் அவங்க கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நெனச்சன், பட் நாங்க பிரிஞ்சிட்டோம்.
ஏன் நீங்க பிரிஞ்சிட்டீங்க?
i ran out of time. had to go elsewhere என்று சொல்லி முகம் வாடினார்.
புரியல கொஞ்சம் கிளியரா சொல்லுங்க என்றான் சேயோன்.

அந்த மனிதர் வலதுபக்கம் சாலையை பார்த்து, யுவர் பஸ் இஸ் அஃப்ரோச்சிங் என்றார். பஸ், பஸ் ஸ்டாப்-ல் வந்து நின்று கதவு திறந்தது சேயோன் bag-யை எடுத்துக்கொண்டு பஸ்-ன் படிக்கட்டு அருகே சென்று எதோ நினைத்து திரும்பி “its was nice talking…” என்று அந்த மனிதரை பார்த்து சொல்ல திரும்பினான், பெஞ்ச்-ல் அந்த மனிதர் இல்லை அவர் இடத்தில ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதை எடுத்துக்கொண்டு பஸ்-ல் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்தான். அவனுடைய மொபைல்-கு ஒரு watsApp செய்தி வந்தது தமயந்தி அனுப்பியிருந்தாள் “exam is start at 9.00 come fast”. ஆவலாக அந்த பெஞ்சில் இருந்த துண்டு சீட்டை பிரித்து பார்த்தான் அதில்

“சிலநேரங்களில்
தொலைதூர நினைவுகள் கூட
மிக நெருக்கமானதாக இருக்கலாம்”
-CHECK YOUR WATCH

என்று எழுதி இருந்தது. படித்தது புரியாமல் அவன் அவனுடைய வாட்ச்-யை பார்த்தான். ரொமப் காலமாக ஓடாத வாட்ச் இப்போது ஓடிக்கொண்டு இருந்தது. வாட்ச்-யை கழட்டி அதை முன்னம் பின்னும் திருப்பி பார்த்து காதில் வைத்தான் டிக், டிக், டிக்… என்று நொடி முள் சுழன்று கொண்டுஇருந்தது. என்ன நடந்தது என்று சில நொடிகள் யோசித்தான். புரிந்தது, முகத்தில் மெலிதான புன்னகையும் கண்களில் கண்ணீரும் பெறுக ஜன்னல் வழியே பனிபடர்ந்த சாலையை…

-இளையாள் கார்த்திகேயன்

✍️ சில நேரங்களில் சில மனிதர்கள்…. ✍️

2 thoughts on “சில நேரங்களில்…

Leave a reply to Subash Cancel reply